Thursday, November 3, 2011

2 comments:

  1. மனம் இணைந்த எஙளை
    மணமக்களாக்கி அழகு பார்க்காமல்
    மரண தேவனை முத்தமிட வைத்தென்
    மணாளனை பிரித்து என்
    கண்ணில் உதிரம் சிந்தவைத்தனரே!

    பாரீரில் உள்ளோரே உந்தன்
    கருவடைந்த உள்ளத்தினால்
    உருவமுள்ள என்னவன்
    அருவமாகிப் போனானே!
    இது சரியோ! எந்தன்
    மணாளனை இழந்து நான்
    இன்னமும் இருப்பது முறையோ!

    கண்ணகியின் கண்ணீர்
    மதுரையை எரிக்கும்...
    உங்களின் செய்கையால்
    என் உயிர் பிரியும்....
    மண்ணின் பெருமை பேசும்
    பெண்ணான நான்
    கண்ணான என் கண்ணாளனிடம்
    கண்ணீருடன் செல்கிறேன்!

    இணைகிறோம் நாங்களும்
    மரணத்தில்.....
    உங்களின் ஜாதி, வரட்டு
    கவுரவம் வாழட்டும்!

    ReplyDelete
  2. wow really superb..indak kavithai romba pudichirukku..

    ReplyDelete

Get Widget

 

Find me on facebook

Followers